கண்டறிந்துணர்ந்து பாருங்கோ
kandarindhunarndhu paarungo
கண்டறிந்துணர்ந்து பாருங்கோ வுமைப் படைத்த கடவுளண்டைக்குச் சேருங்கோ.
பண்டு நீர் வணங்கி வந்த பலபல தேவதைகள் படுத்திய ஆபத்திலுமைக் கெடுத்து தோ இரட்சித்து தோ அதை. - கண்
1. காத்தவராயன் கறுப்பண்ணன் கண்ணணூர் மாரியுங் கல்லுக் கோட்டுச் சூரியும் வல்ல தேகரி வீரியும் பார்த்திருக்கக் கொண்டு போம் பற்பல காட் டேரியும் பங்கருளுந் தெய்வமோ வென் றுங்கள் புத்தியின் கண்ணாலே. - கண்
2. காசியெம சேது மட்டுங் கால் கடுக்க ஓடியுங் காவடி யெடுத்துப் போய்க் கடம்பனைக் கொண்டாடியுந் தாசிகளையாடச் சொல்லிச் சங்கரனைப் பாடியுஞ் சற்றெனும் நன்மை தந்ததோ குற்றங் குறைகள் தீர்ந்ததோ. - கண்
3. பிள்ளையாரைக் குட்டிக் கொண்டு பெருமாள் கோவில் சுற்றியும் பேயாடி போலத் திரிந்து பேச்சியைப் பிதற்றியும் வள்ளியை நற்றிக் கொண்டோடு மாயாண்டியை பற்றியும் வாணாலை மாய்த்துக் கொள்ளாதேயும் வீணான தெய்வங்களி தாக்கும். - கண்
4. கண்ட கோவிற் றெய்வமென்று கையெடுத்துப் போற்றியுங் களிமண்ணைச் சாணியை வைத்துக் கர்த்தா வென்று சாற்றியும் வண்டது போற்கற்றி கற்றி மலர் பறித்துத் தூற்றியும் வந்த பலனே தனு முண்டோ சிந்தையு மிரும்புக் குண்டோ. - கண்
5. சன்னாசி போலுத் திராட்சத் தாவடங்கள் பூட்டியுஞ் சாம்பலைப் பெருக்கப் பூசிச் சடை வளர்த்து நீட்டியும் வன்னக் காவி வேஷ்டியும் பின்னனே கங் கோட்டியும் வம்பைப் பாராட்டியு முன்னச் செம்பைக் காதில் மாட்டியு மென்ன. - கண்
6. பட்ட ராமம் போட்டுப் போட்டுப் பகட்டி யிட்டீரே பாழில் ராமா ராமா வென்று தோழிலுஞ் சுட்டீரே மொட்டை யடித்துத் தலங்களெங்கு முனைந்து கும்பிட்டீரே முழுது முங்களாஸ்தியெல்லா மோசமாய்ச் சிலவிட்டீரே. - கண்
7. பொங்கலிட்டாடுகள் வெட்டிப் பூசைப் போட்டுக் கண்டீரே போட்டியாகப் பெண்களை வைத் தாட்டிக் கோரணி கொண்டீரே சங்கை யற்ற சாஸ்திர சடங்கிலே துவண்டீரே சத்துருப் பிசாசு பண்ணுஞ் சற்பினை யிதென்றே யெண்ணும். - கண்
8. இரண்டு நினை வாயிருந்து இரண்டகஞ் செய்யாதேயும் ஞாய மன்றி யாற்று மத்தை நரகத்திற் சாயாதேயும் பண்டது போற் குந்திக்குந்தி நொண்டி நடவாதேயும் பராபரனை விட்டு விட்டுப் பாகாலைப் பணி யாதேயும். - கண்
9. எத்தனை கோவில்களுண்டோ அத்தனை யுருவங்களும் எண்ணிறந்த மடங்களும் ஏரியுங் குளங்களும் வித்தையல்லோ நெல்லை வேத நாயகனைக் கேளுங்கோ வெண்கலஞ் செம்புங் கருங்கல் லுங்களி மண்ணுங் காணுங்கோ. - கண்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal