கல்வாரி சிலுவை காட்சியை
kalvaari siluvai kaatsiyai
கல்வாரி சிலுவை காட்சியைக் கண்டால் கலங்குது நெஞ்சம் பெருகுது கண்ணீர்
பாவம் செய்தது நான் தானையா - இந்த பாடுகள் உமக்கு எதற்கோ ஐயா என்னில் நீர் கொண்ட நேசத்தினாலோ உன்னையே பலியாய் ஒப்புவித்திரோ
சிரசின் சிந்தனை பாவம் போக்க என் அரசே முள்முடி சூடினீரோ குருதி வடியும் உம் கோரமுகம் கண்டால் நடுங்குது உள்ளம் அடங்குது தன்னால்
காட்டு புஷ்பத்தை உடுத்தினவா உமக்கு கட்டுவதற்கே கந்தை தானோ தாகத்தை தீர்த்த தியாக மூர்த்தி - உம் தாகம் தீர்க்க காடிதான் எதற்கோ
கல்வாரி காட்சியை நினைக்கையிலே உந்தன் காயங்கள் தோன்றுது கண்களிலே பரிசுத்த குருதி பாய்கிறதங்கே தரிசிக்க கண்களை திறந்திடுமையா
பாவி என்மேல் கொண்ட நேசத்தினால் ஐயா பாதகன் போல் தொங்கும் இயேசு தேவா பாதகர் கூடி பரிகாசம் செய்ய போதகா பொறுமை காட்டிடும் தேவா
சந்திர சூரிய சுடரொளிகள் யாவும் சகியாமல் தன் ஒளி மங்குதையோ சாந்த சொரூபி நீர் சாய்ந்த சிலுவை அனுதினம் அடிமைக் கடைக்கலமையா
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal