கலங்காதே திகையாதே
kalangaadhae thigaiyaadhae
கலங்காதே திகையாதே என்கிறார் உன்னைக் காக்கும் தேவன் உன்னோடே இருக்கிறார்
நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன் நிற்பதில்லை மோசேயோடிருந்தது போல - நான் (2) உன்னோடும் இருப்பேன் என்கிறார்
உன்னை காக்கிறவர் உறங்காரே உன் வலபக்கம் நிழலாவாரே எல்லா தீமைக்கும் விலக்குவார் - உன்னை (2) இது முதற்கொண்டு காப்பாற்று வார்
தீராத நோய் என்றெண்ணாதே நீ ஆறாதுயரம் கொள்ளாதே தன் கையில் உன்னை வரைந்தவர் -தேவன் (2) கண்ணீர்கள் யாவும் துடைப்பவர்
உலகினில் இருப்போனைக் காட்டிலும் உன்னிலிருப்பவர் பெரியவர் இரவின் பயங்கரம் கிட்டுமா - உன்னை (2) உன் விசுவாசக் கேடகத்தில் முட்டுமா
காட்டு புஷ்பத்தை உடுத்தினார் சாலமோனிலும் மகிமை படுத்தினார் உன்னையும் உடுத்துவிப்பார் அல்லவோ நீ கொள்ளுவது வீண் கவலையல்லவோ
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal