காத்தாள் வல்லவனே
kaathaal vallavanae
காத்தாள் வல்லவனே சருவேசா காத்தாள் வல்லவனே.
சாத்தான் கெட்டோடவே, தாரணி கொண்டாடவே - காத்தாள்
1. வலராசர் வாழ்கவே மாற்றலர்கள் தாழ்கவே வலிதந்து காமனு நசரேனா. - காத்தாள்
2. போதகர் சிறக்கவே மாதவர் நிறக்கவே பாதாம்புயந்தாரய் பர தேவா. - காத்தாள்
3. திருச்சபை பெருக்கமாய் குருக்களும் நெருக்கமாய்ச் சீரோங்கக் கிருபை கூரமரேசா. - காத்தாள்
4. பந்துசனம் நீடவே சந்ததிகள் கூடவே பாதார விந்தந் தாபர தேவா. - காத்தாள்
5. புத்திரர் செழிக்கவு மித்திரர் களிக்கவும் பூதலந் தழைக்கவுஞ் செய்திரியேகா. - காத்தாள்
6. பாவிகட் கிரங்கியே ஆவியின் வரங்களை மேவியருளம் பரா மனுவேலா. - காத்தாள்
7. மிக்க புகழ் நாட்டு மேன்மை நலங்காட்டு வேதநாயகன் பாட்டுப் பாராட்டு. - காத்தாள்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal