இஸ்திரி பாவ நாசனா
isthiri paava naasanaa
இஸ்திரி பாவ நாசனா நீ கிருபை தயாளனே தேவா னுக்கிரகாவே.
வஸ்தரிய வாசனா மகிமையினாசனா மானுவேலி யேசு மேசையா வோசன்னா.
1.ஆரணக்கலையே ஆகமத்தலையே காரணமோ காதற் பெத்தலையே சூரியப் பிரவையாய்த் தோன்று மெய்ப்பிரதாப தாரண தாபர தாயக தயாபர கிறிஸ்தாதிபா.
2. வேத விற்பனமே வீழ்ந்தவர்க்கினமே பாதருளே பாதம் வந்தனமே பூதலந் தனையே புரக்க வந்தனையே யேதமிலேக திரித்துவயே யோவா கிறிஸ்தாதிபா.
3. வித்தகத் தெருளே விண்ணவர்க் கருளே சித்தமதாயச் சேர்ந்த மெய்ப் பொருளே சத்துரு வினையே தடுத்தருளினையே பத்தர் பணிந்து பராவிய பராபரக் கிறிஸ்தாதிபா.
4. தேவ சொரூபியே திவ்விய அரூபியே பாவ மிலாப் பரம பிரதாபியே தாவீது கோவே தயாபர யோவாவே காவலவா கலவாகா காரணக் கிறிஸ்தாதிபா.
5. ஆதி முன்னவனே ஆண்ட மன்னவனே நீதியெலாம் நிறைந்த உன்னதனே பாதளித் தருளே பக்கிஷப் பொருளே வேதநாயகன் பண்பாடிய மெய்யான கிறிஸ்தாதிபா.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal