இரக்கங்களின் படி இரங்கும்
irakkangalin padi irangum
இரக்கங்களின் படி இரங்கும் என் பாவம் முற்றும் கழுவும் அக்கிரமங்கள் நீங்க கழுவி கிருபையாலே நிறையும் தேவே
துர்குணத்தில் உருவானேன் - தாய் பாவத்தில் கர்ப்பம் தரித்தாள் பொல்லாங்கானதை நடப்பித்தேன் போதகா உன் கண்கள் கான
தேவரீர் ஒருவருக்கே முன் தீமையான பாவம் செய்தேன் நியாயத்தில் உம் நீதி விளங்க தேவனே அறிக்கை செய்தேன்
சுத்திகரியும் ஈசோப்பினால் அப்பொழுது சுத்தமாவேன். என்னை கழுவியருளும் உறைந்த மழையிலும் நான் வெண்மையாவேன்
அக்கிரமங்களை அகற்றிடும் ஆனந்த மகிழ்ச்சி பொங்க நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும் கர்த்தருக்குள்ளே
சுத்த இருதயத்தை என்னிலே நிலைவர ஆவி உள்ளிலே புதுப்பித்து பூரணப்படுத்தும் புதிய ஆவி தாங்கிட செய்யும்
உம் சமூகம் விட்டு தள்ளாமல் உம் ஆவி எடுத்துக் கொள்ளாமல் இரட்சணிய சந்தோஷத்தை திரும்ப எனக்கு தாரும் தேவா
பாவிகள் மனந்திரும்பவே பாதகருக்குப தேசிப்பேன் இரத்த பழிகளுக்கு நீக்கும் நாவு உம்மின் நீதியை பாடும்.
உம் புகழை அறிவிக்கும் என் உதடுகளை திறவும் தேவா பலியை நீர் விரும்புவதில்லை தகனபலி பிரியமுமில்லை
சீயோனுக்கு பிரியம் செய்யும் எருசலேமின் மதிலைக்கட்டும் நீதியான பலிகள் காளை பீடத்தின்மேல் பலியிடுவார்கள்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal