இரக்கமுள்ள தேவன் உந்தன்
irakkamulla devan undhan
இரக்கமுள்ள தேவன் உந்தன் அருகில் இருக்கிறார் உந்தன் கண்ணீர் துடைத்திடும் இயேசு உனக்குள் வாழ்கிறார் நீ அழுவதும் ஏன் கண்ணீ ர் வடிப்பதும் ஏன் -
உன்னை காக்கும் தேவன் உன்னை கைவிடுவாரோ உனக்காக மரித்தவர் உன்னை மறந்திடுவாரோ
வாழுகின்ற வாழ்க்கை உனக்கு நரகமானதோ நம்பிய சொந்தங்கள் எல்லாம் எதிரியானதோ கர்த்தர் உன் ஆக்கினை அகற்றி சத்ருவை விலக்கிடுவாரே இஸ்ரவேலின் ராஜா உந்தன் நடுவினில் வாழ்கின்றாரே இனித் தீங்கை நீ காணாதிருப்பாய்
குழந்தை பாக்யம் இல்லையென்று குமுறுகின்றாயோ மலடி என்ற பெயரைச் சுமந்து மனம் மமந்தாயோ கிடைத்த வாழ்வும் சரியில்லையென்று சலித்து கொண்டாயோ குடிகாரக் கணவனை எண்ணிக் கலங்குகின்றாயோ உந்தன் துக்கம் சந்தோஷமாக மாற்றிடும் தேவன் உண்டு நிச்சயம் ஓர் நாள் நீயும் நன்றி சொல்வாய் அற்பதம் கண்டு உந்தன் நம்பிக்கை வீண்போகாதம்மா
வானில் பறக்கும் பறவைக்கெல்லாம் உணவளிக்கிறார் காட்டில் மலரும் பூக்களைக்கூட உடுத்தி மகிழ்கிறார் . அவைகளைக் காட்டிலும் இங்கே நீ தான் மிக உயர்ந்தவளம்மா உனக்காகத்தானே அன்று தன் உயிரைத் தந்தாரம்மா இன்னும் ஏனம்மா கண்ணீர் வடிக்கிறாய்
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae