இரக்கமிலையோ நீ
irakkamilaiyo nee
இரக்கமிலையோ நீ இத்தனை சுற்றுகள் கற்றதுமறிவே இரக்கமிலையோ
1. நரர்க்கு தவியாய் வந்தோனோ யேசு நாயகனென்றது நிசந்தானோ வுன்மே னாட்ட மதாயா வல்வாட்டு தையா சுரர்கதிபதியே வரத்திருமதியே சுந்தரனே ஞானேந்திரனே செப வந்தனை தந்திடு மெந்தனை யாளவும்
2. மனத்துயரிலா மரிமகனே ஞான மகத்துவனே கிருபையின் முகனே தவிது மகராசன் குலசத்திய வாசன் வனத்திலை யாயிரஞ் சனத்தைப் பொசிக்கச் செய்த மங்கள நித்திய மணவரசே சபை நங்கையர் துத்திய மிடு சிரசேயுன்
3. கப்பலிநீ நித்திரை கொண்டாயோ அந்தக் கள்ள மெனக்குமிப் போ விண்டாயோ எந்தன் கஸ்தியெலா நிவர்த்தி செய்வா யொப் பொரு வரிலாத முப்பொருளே யதீத உத்தம முற்துயர் வித்தகனே பெலன் மெத்த மிகுத்த திரித்துவனே யினம்
4. லாசர் மரிக்கு முன்னே கேட்டாயே பின்னும் நாலுநாள் தாமதம் போட்டாயே அந்த ஞாயமலோவிது பாயமலோ மாசணுகாத தேவ சேயா சகாயா நேயா வஞ்சக மஞ்சிய மந்திரனே யென் சஞ்சல மிஞ்சுது தந்திரமேதோ
5. வேதநாயகன் றமிழ்க் கொண்டாயே எந்தன் மெலிவு குறைகளெல்லாங் கண்டாயே யிவ் வேளையிலே யொரு நாளையிலே தீதனைத்து மறுத்துக் கோதனைத்தும் பொறுத்துத் தீர்ப்பது மிங்கெனையேற்பதும் நெஞ்சொடு பார்ப்பது மன்பொடு காப்பது முன் கடன்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal