இராஜனாம் பரம ராசன்
iraajanaam parama raasan
இராஜனாம் பரம ராசன் தவிது மகா இராஜன் பதிக்கு வந்தானே
வாசகத்தின்படி யுலாசமாக நீச வாகன மேற் கொண்டு சிநேகச் சீயோனுக் கென்று.
1.அண்டர்கள் சேனையும் மிண்டர்கள் தானையு மண்டிய புத்திரருந் தொண்டர் சமுத்திரமும் பெண்டுகள் முழக்கமு மெண்டிசையு மதிரக் கண்டகர் மனங்க லங்க ஆதி செய் பண்டு வினையு மலங்கக் கொண்டு வந்து சாஸ்திரிகள் காணிக்கை கொடுக்கக் கோவர்த்தனர்கள் கும்புகூடி வந்தடுக்கத் தெண்டனென்று பனிரெண்டு சீடருரை விண்டு வேதமோத சத்திய போத சற்பிரசாத இயேசு நாத
2. பெத்தலகேஞ்சிறந்து சித்துருவாய்ப் பிறந்து முத்தி வழியைக் காட்டி சுத்தக் கிருபைப் பாராட்டி மெத்தமகிமை நீட நித்தியானந்த சந்தோட வெற்றிப் பிரவடீகராகச் சமஸ்தமூ முற்றுமுடித்துச் சிநேக சத்திய பராபரனின் உத்தமம் விளங்கத் தவிதின் குமாரனெனச் சகலரும் வணங்க கர்த்தருடைய நாமத்தில் வருகிற கிறிஸ்துவென்று வாழ்த்தப் புகழ் சாற்ற எமைத் தேற்றக் கரையேற்ற
3. கன்னியர் சீயோனே நின்னுரிமைக் கோனே பொன் மரிமீதேறி உன்னையன்பாய்க் கோறி துன்னி வருகுதெனச் சொன்ன நெறிப் பிரகாரம் முன்னும் பின்னும் போறவார கும்புகளுன் நன்னெறிச் சீடருஞ் சேர வன்னப் பட்டாடைகள் வழி எங்கும் விரிக்க மரத்தின் கிளைகளைத் தறித்தெங்குந் தெளிக்க உன்னதத்தி லோசியன்னா தவிதிசரேல் மன்னாவென்று பாடப் பிள்ளைகள் கூடப் புகழ்நீடக் கொண்டாட
4. ஆதி வினைகளற யூதர் பதிகள் பெறச் சாதியெலா மீடேற நீதிகள் நிறைவேற தீதலகை களோட மாதவங்கள் கைகூட தாதையர்க்குச் சங்கீர்த்தனமு மகிமையும் ஓது செபமுந் தோத்திரமும் போதவனாதி யிலிப்போதும் எப்போதுமாக புகழ்ச்சி மகிழ்ச்சியு முண்டாகிப் பிரஸ்தாபமாக நூதனக் கவிசொல் வேத நாயகனும் பாதத்தணுகி வாழ்கத் திருவுளமாகத் திரியேகச் சுவா பீக
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal