இன்னமுந் துன்பப்
innamun thunbap
இன்னமுந் துன்பப் படாதே யேகனே காப்பாய் விடாதே.
உன்னதத் தேவகுமாரா உத்த மனுடவதாரா உயர் வானுல காவையும் நீடுபரா சயகோடி சகாய தயா நிதியே சுய தேவ சுவாப சுயாதிபதி பயமா யுளமே படும் வாதனையால். - இன்ன
1. கவலை மா பொல்லா விசாரம் காசோதன மோகன காபரணம் மாசால மினாருறவோ மகரோ தூசோ மணியோ சுபவாழ் வெனவே வேசாரி விடாதுடலே மெலியும். - கவலை
கருவுந்தி விழுந்தது கால் முதலே பரு வந் தனிலும் பல மாயையினால் உரு வந்தமு மாறியுழன் றொழியா வெரு வந்த மிகுந் துளமே மிடையும். - கவலை
கடிய தீமையான கோரம் பவவினை மகா விஸ்தாரம் பரமனே காத்தாளுன் பாரம் பல சத்துரு பண்ணுமு பாதனையால் உலையிற் படும்வள்ளிய மாயுருகா திலனுக்கருள் செய்யிச றேலரசே மலைவுற்று லைவாய் மிக வாடுகிறேன். - இன்ன
2. மாய வாழ்வா லெந்த லாபம் மாதாவிவர் மாதிவர் மக்களிவர் தாதா தயை நேசரெனத் தழுவி யேதாதரவே னுமியற்றுவரோ வேதா விடுமோலை வெளிப்படிலே. - மாய மதி மங்கியழிந்து மருண்டுயிரும் விதனங்கள் மிகுந்து பிரிந்தவுடன் கதியங்குற நன்று தவுங்கழலே யதிதுங்க துரந்தா வம்பரனே. - மாய
மாறிலாத மனஸ்தாபம் தாயினாலே வந்த சாபம் சாவு தீர்வை தேவ கோபந் தணியத் தயை வைத்தொரு சித்துருவாய் மணிலுற்ற மகத்துவ கிறிஸ்தரசே யிணையப் பிணை முற்று மியற்றியுமே கணிசத் தொரு மித்தருள் கற்தவியம். - இன்ன
3. மோசே ஓரேப் பின் கண்டு தா மூதாதைய னாபிரகாமுனமே யாதா முதலாய் வருமாரியர்கள் யூதாவுடனே யுறவோர் பணியுஞ் சாதாரண வேதத் தயாபரனே. - மோசே
முனைதங்கிய சேனையின் முன்னணியே வனமெங்கு முலாவிய மன்னவனே கனசங்கை யோடே யொரு கன்னிமரி தனையென் கவரும் பிரசன்னதியே. - மோசே
மூன்றாளொன்றாய் நின்ற நீதா மேசியாவென் னேசு நாதா வேதநாயகன் சங்கீதா விடையிட்டி சறேலை விடுத்த மார் படையைக் கடலிற் படவைத் தபரா கொடுமைக்கு ணெருக்க முறக்குறுகும் அடுமைக் குடனே யருள் பற்றரசே. - இன்ன
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal