இம்மானுவேலவரே என்றும் நம்மோடு
immaanuvelavarae endrum nammodu
இம்மானுவேலவரே - என்றும் நம்மோடு இருப்பவரே அன்பின் கரத்தால் அணைத்தெடுத்தென்றும் துன்பத்தை நீக்குவாரே
அத்தனின் அண்டையில் இன்று ஓடி வா அவர் காட்டும் மாதிரி பின்பற்றிடவா அமலன் முழுகி ஸ்நானம் பெற்றாரே அவர் கரை ஏறுகையில் ஆவிபெற்றாரே
பாவத்தை அறிக்கை செய்திட வேணும் பூரணமாய் அதை வெறுத்திட வேணும் இயேசுவோடே பாவம் மரித்திட வேணும் இன்புற்று அவரோடே உயிர்த்திடவேணும்
தேவன் விளக்கிய வேத பிரமாணம் ஆதிசபை செய்த தெய்வ தீர்மானம் ஆவியின் ஜலத்தினால் பிறந்திட வேணும் தெய்வத்தின் நீதியை நிறைவேற்ற வேணும்
உன்னதன் கட்டளை நன்மனதோடு உடன்படிக்கை செய்து கிருபையை நாடு தன்னையறிந்து மெய்விசுவாசத்தோடு தண்ணீரில் முழுகி தமையனை பாடு
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal