இல்லத்தின் தலைவராய்
illathin thalaivaraay
இல்லத்தின் தலைவராய் இயேசு இருக்கிறார் உள்ளத்தின் நேயராய் யாவும் கேட்கிறார் மறைவான விருந்தினராய் தினமும் வருகின்றார் குடும்பத்தின் குறைகள் யாவும் அறிகிறார்
அள்ளி அணைப்பதில் அன்னையாகுவார் அடித்து திருத்திடும் நல் தந்தையாகுவார் ஆபத்துக் காலத்தில் தோழனாகுவார் வறுமை நேரத்திலே வள்ளலாகுவார்
துன்பங்கள் வரும்போது ஆறுதலாவார் தனிமையிலே தியங்கும் போது துணையவராகுவார் காரிருளே சூழும்போது ஜோதி ஆகுவார் கலங்கும் எந்தன் பாதையிலே காவலன் ஆவார்
இயேசு வந்த இல்லத்திலே சந்தோஷம் உண்டு எல்லாவற்றிலேயும் அங்கு ஸ்தோத்திரம் உண்டு இடைவிடாமல் ஏறெடுக்கும் ஜெபங்களும் உண்டு ஆவியிலே நிறைந்திருக்கும் அனுபவம் உண்டு
கண்ணீர் யாவையும் துடைத்திடுவாரே கணப்பொழுதிலே மறு ரூபம் ஈவாரே கர்த்தரோடு சேர்ந்து நானும் பறந்திடுவேனே கர்த்தரையே பாடி தினமும் மகிழ்ந்திடுவேனே
வியாதிப் படுக்கையில் வைத்தியனாவாரே வேதனைக் கண்டு மனம் உருகிடுவாரே காயங்களால் எந்தன் நோயைத் தீர்த்திடுவாரே கவலையற்ற வாழ்வை எனக்கு அளித்திடுவாரே
மேகத்தின் மேல் இதோ இயேசு வருகிறார் கணப்பொழுதில் மரித்தோர்கள் மீண்டும் எழும்புவார்கள் கர்த்தரோடு நாமும் அன்று ஆகாயம் செல்வோம் கண்ணீர் யாவும் மறந்து அவரில் ஆனந்தம் கொள்வோம் பரமானந்தம் கொள்வோம்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal