ஞானஸ்நானத் தீட்சையே
gnaanasnaanath theetsaiyae
ஞானஸ்நானத் தீட்சையே கன மானத் தியானக் காட்சியே யின நன்மைப் பிரம சூட்சியே மன வுண்மைப் பரம சாட்சியே
சனவானத்தமலர் மீட்சியே தன வானொத்தவர் சொன் மாட்சியே தினம் மகிழ்ச்சி புகழ்ச்சி திகழ்ச்சி சுபட்சி மாட்சி மேன்மைக் கத்தாட்சியே - ஞான
1.அக்கியானத்திருள் நாசமே - அதி மெக்கியானப் பிரகாசமே - மதி அரிய நல் விசுவாசமே - கதி பெரிய சொல் லுபதேசமே - நிதி மிக்காப் பொக்கிஷ பாசமே - பதி விக்கா பக்கிஷ நேசமே - விதி லாட்சமட்செய ராட்சியப்பரம தீட்சண திவிய கடாட்சமே - ஞான
2. ஆரண ஞான வேதாந்தமே நிறை பூரண மோன நாதாந்தமே - பறை அர்ச்சய வுச்சிதா னந்தமே - மறை நிச்சய சச்சிதானந்தமே - முறை காரண தீத ஞானேந்திரமேயிறை தாரண போத விருத்தாந்திரமே யுறை கந்தரஞ் சுந்தரம் முந்தர மந்தரம் காந்த சுகாந்த திட்டாந்தமே - ஞான
3. மேலாதார சற்பாத்திரமே - துவி நூலாதார சொற் சாத்திரமே - கவி வேதநாயகன் றோத்திரமே - புவி நீதநாயகன் சூத்திரமே - நவி சீலாகோல முக்காத்திரமே - சவி சாலாமூல தக் கோத்திரமே - செவி சித்திர விசித்திர சமுத்திர சுமுத்திர விச்சேத்திர நன்னேத்திர நட்சத்திரமே - ஞான
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal