எழுந்தருளுமேசு சுவாமி
ezhundharulumesu suvaami
எழுந்தருளுமேசு சுவாமி விழுந்தலகை யழிந் தொழியத் தொழுஞ் சுரரும் வரலாச்சே- எழுந்
1.இஸ்திரிகள் கந்த வர்க்கம் எடுத்தேந்திப்பிரே தலங்கா ரத்தின் முறை தேடியிதோ ஆசரிக்க வந்தார்- எழுந்
2. மகதலாவூர் மரியூ மகிழ்ந்து தெரிசித் தேற்ற அகமகிழ்ந்தப் போஸ்தலர்கள் அதிசயித்துப் போற்ற- எழுந்
3. பாடுபட்டு மரித்தடக்கப் பட்டதின மூன்றாச்சு ஏடுமுட்ட வரைந்த தெல்லாம் நிறைவேறி முடிந்தாச்சே எழுந்
4. பரதபித்து சீடரெல்லாம் படுந்துயரங் கொஞ்சமல்ல விரசாக ஞாயிறதில் வெள்ளியுதித்தாச்சே எழுந்
5. முத்திரையுங் காவல்களும் மூடிய கல்லதும் நீங்கிச் சத்துருக்கள் நடுநடுங்கித் தயங்கி மனங்கலங்க- எழுந்
6. வேதாளம் நடுங்கி விழ விண்ணோர்கள் திரண்டு தொழ பாதாளமிடிந்து விழப் பராபரனே யெழுந்தருளும்- எழுந்
7. சத்திய வேதந் தழைக்க சகல உலகுஞ் செழிக்க நித்திய சீவனையழிக்க நேசருளங் கழிக்க- எழுந்
8. விஸ்தார உலக மதில் மெய்யான திருச்சபையி லிஸ் தோத்திர சங்கீர்தனம் எந்நாளு முண்டாக- எழுந்
9. வேத நாயகன் பாடி மெய் சபைகள் கொண்டாடி காதலுடன் கூடிவந்தார் கர்த்தாவே எழுந்தருளும்- எழுந்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal