எத்தனை கோடி ஜனமிருக்க
ethanai kodi janamirukka
எத்தனை கோடி ஜனமிருக்கு ஏகமாய்ப் பாவத்தில் அமிழ்ந்திருக்கு விடுவிக்கும் பொறுப்பு உனக்கிருக்கு விரைந்து சொல் அதை எடுத்தவர்க்கு
யாரை அனுப்பிடுவேன்? யார் போவார் நமக்காய்? பேதுரு, பவுலும் போனதுபோல நீ செல்லமாட்டாயா?
தேசத்தில் சாபம் நிறைந்திருக்கு தெருவெல்லாம் சிலைகள் மலிந்திருக்கு அசுத்த ஆவிகள் குடிபுகுந்து ஆட்டிப்படைக்குது அலைக்கழித்து
கொள்கைகள் பேச ஆளிருக்கு கோஷங்கள் எழுப்பக் குரலிருக்கு வேஷங்கள் போட ஜனமிருக்கு அனைவர் மனதிலும் இருளிருக்கு
சில்லரைச் சுகங்கள் தழைத்திருக்கு சிந்தையில் மயக்கம் நிறைந்திருக்கு சிறையாக்க அவைகள் காத்திருக்கு சிறையானோர் ஜீவனை அழித்திருக்கு
நாடு முழுவதும் ஜனமிருக்கு நற்செய்தி கேளாத இனமிருக்கு சுப செய்தி பரவி செல்வதற்கு திறமைகள் யாவும் உனக்கிருக்கு
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)