எப்படி நீ தப்பிடுவாய்
eppadi nee thappiduvaay
எப்படி நீ தப்பிடுவாய் இறுதி காலத்தில் மரணதூதன் சிங்கம் போல சீறி வருகிறான்
எத்தனை நாள் இருப்பாயென்று உனக்கு தெரியுமா எந்த நேரமோ எந்த வேளையோ மரணம் வருவதறிய மாட்டாய் மதியினுட்பத்தால்
வாலிப வயது மங்கை பருவ வயதிலோ நடுவயதிலோ நல்ல பெலத்திலோ மரணம் வருவதறியமாட்டாய் மதியினுட்பத்தால்
நடுவயதில் நல்ல கல்வி முடிக்கும் வேளையில் களிப்பின் நேரத்தில் கலியாண நேரத்தில் மரணம் வருவதறியமாட்டாய் மதியினுட்பத்தால்
மரித்தால் எங்கு போவாய் என்று உனக்கு தெரியுமா மனித சிருஷ்டியில் மகிழும் ஆத்துமா ரட்சை பெற கர்த்தன் இயேசு மரித்துயிர்த்தாரே
பாவத்தின் பலன் நரகம் சம்பளம் மரணம பாவ நெஞ்சமே நீ பதறமாட்டாயா மரித்த பின்பு மனந்திரும்ப செயலிருக்காது
இன்று பாவி உன்னை இயேசு வருந்தி அழைக்கிறார் விரும்பி வாராயோ நெருங்கி சேராயோ வருந்தி அழைக்கும் இயேசு முகம் திரும்பி பாராயோ
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal