என்னையா நீரெங்கே
ennaiyaa neerengae
என்னையா நீரெங்கே வந்தீர் ஏழையாகப் பிறந்தீர்
1.உன்னதப் பிதாவின் சேயா ஒப்பிலாக் கிருபைத் தூயா ஒருவருமறியா வருண்மிகு திருமறை நெறியே கருணையி னோவியமே யதமேவைக் காயிவ்வித முருமையுடன் மனது ருகி யுருகி.
2. சாமிக்கோராத நானே சர்ப்பத் தடிமை தானே தீமைவழி சென்றேனே தேவகிருபை யெண்ணேனே திரிமுதலவனே திறமிகு சருவவல்லபனே பாதகன் செழித்தருள் பெற முழுவுலகமுமே களித்துயரவுன்னிய திருவுளமோ
3. ஆதிவினையை நீக்கி அந்தகாரத்தைப் போக்கிச் சாதிகளைக் கைத்தூக்கித் தாதையோடுற வாக்கித் தயை சொரிந்திடவோ வும திருதய மகிழ்ந்திடவோ இசறேலர் சனத்தையும் சிறைவிடுத்தவர் துன்பதீ தனைத்தையுமதமாக்க வந்தனையோ.
4. உன்னத்தற்கு தோத்திரமுலகின்றி வெம்மாத்திரம் அன்னை கெர்ப்பத்தின் சூத்திரமறியக் கூடாவிச் சேத்திரம் அதிசயப்பொருளே அமரர்கடுதிசெயுந் தெருளே வேதநா யகத்தைந் திருமுகத் தொடு பார்த்தவன் அகத்தையுங் கடனனைத்தையுந் துலைத்தவா.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal