என்றைக்குச் சாவேனோ
endraikkus saaveno
என்றைக்குச் சாவேனோ என்னேசுவை நான் என்றைக்குச் சேர்வேனோ
ஓன்றாமனாதிபிதா உரிமைக் கிறிஸ்துவுக்குள் என்றை
1. இன்றைத்தினமோ நாளையோ இன்னமோராண்டோ இரவோ பகலெவ்வேளையோ துன்றிய வாலிபத்தோ தோன்றும் முதுமையிலோ துன்ப வியாதியிலோ சுகமாயிருக்கும் போதோ
2. வன்மம் பகையில்லாமல் குறை சொல்லாமல் மனச்சாட்சி வாதை கொல்லாமல் கன்மப் பாவஞ் சாராமல் கற்பனைத் துரோகஞ் சேராமற் கவலை விசாரத்தினால் கலங்கி மனஞ் சோராமற்
3. தரும வழியில் நடந்து தீமை கடந்து தவசுமுறைமை தொடர்ந்து பரமகதியை நோக்கி பலதுற்குணமும் நீக்கி பாவ மன்னிப்பை நாடி தேவகிருபையைத் தேடி
4. ஐந்து மெய் திருக்காயமும் சிலுவைதனில் அறையுண்டிருந்த நேயமும் நிந்தையின் முண்முடியும் நீண்ட இருப்பாணியும் இரத்தப் பிரவாகமுங் கண்டுத்துயரங்கொண்டு
5. வேதாகமங்களைத் தேர்ந்து நன்றாயாராய்ந்து மிகவும் மனங்களி கூர்ந்து சாதாய்ச் செம்மரியாடாய் சன்மார்க்கனாக நீடி வேதநாயகன் பாட்டால் மேசியாவைக் கொண்டாடி.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal