எந்தாயிந் நேரம்
endhaayin neram
எந்தாயிந் நேரம் இரட்சியும் பா ரம்
தந்தைப் பராபரன்றன் விந்தைக் கிறிஸ்துவே. - எந்
1. பொன்னுலகத் திருந்திங் கிந் நிலத்தைப் புரக்கக் கன்னியு தரத்துற்ற சின்னத் தெய்வ குமாரா. - எந்
2. எத்தனை சோதனையோ சத்துருச் செய்யும் நிதம் பத்தனைக் கைவிடாதே சுத்தக் கிருபையே. - எந்
3. சிங்கங் கெர்ச்சிக்கும் போல வங்கைப் பிசாசு சீறு தெங்கும் புகல தில்லைச் சங்கைப் பராபரா. - எந்
4. துக்கக் கவலை யொரு மிக்கக் கெடக் கிருபை செய் உக்கிரப் பிசாசை வென்ற சக்கரக் கோர சங்காரா. - எந்
5. போதப் பகைஞர் செய்யும் வாதைப் படாமல் வந்தெப் போதைக்கும் உந்த நின்றிப் பேதைக் கிரக்கஞ் செய்யும். - எந்
6. ஆறுதலுன்னை யன்றி வேறொரு வஸ்து வெனும் பேறு பெறவெனக்குத் தேறுதல் சொல்லுமோ. - எந்
7. வேதநாயகன்றன் பாவா சாதிகட்கு இரங்கும் யோவா நீதியின்றவிது கோவா பாதுகாத்தருள் மெய்த் தேவா. - எந்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal