என் பிரிய நாயகனை
en piriya naayaganai
என் பிரிய நாயகனை இயேசு நசராதிபனை அன்பு மிகு பூரணனை அரியர் கொல யோசனை
1.முன்பு செய்த யூதாவினை முத்தியிடச் செய்தையனை துன்புறப் பிடித்தேபினை துட்டர் சென்றார் காய்பாமனை
2. கண்ணதைக் கண்டாலழாதோ காதிற் கடுஞ் சொல் விழாதோ எண்ண மனைத்தும் போகாதோ இதைய முடைந் திடாதோ
3. ஞாயம் விசாரிக்கு முன்னே நாதனைச் சினந்து கொன்னே திய னறைந்தான பின்னே சிந்தனை யுறாத தென்னே
4. மூப்பர் வேத பாரகரும் முக்கிய சங்கத்தார் பலரும் காய்புறு சேட்டாரியரும் கன் றுதல் கொண்டார் எவரும்
5. சேவகரும் சேர்ந்து கூடி சேனை வித வசைகள் பாடி கோவை கொல்ல வகைகள் தேடி குற்றம் சாட்டினார்கள் சாடி
6. கேள்வி பல கேட்டிடித்து கிறிஸ்துவின் கன்னத் தடித்து நாள் விடியும் வரை நடித்து நகை செய்தனர் துடித்து
7. குட்டி இரா முழுதும் வைது கோரணிகள் பலதும் செய்து திட்டி வெகு வினைய மெய்து சீரினர் நிந்தனை களுய்து
8. தேவ சுதன் எனப் பரனார் செப்பு மொழி கேட்ட வொன்னார் தேவ தூஷணஞ் செப்பினார் தேறு மெனவே சாற்றினார்
9. பாவிகள் பரன் சுதனை பழி சுமத்தி மன்னனை மேவி அதிகாரமனை விரைந்தாரான் மாவே நினை.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal