என் தேவனே இரங்குமே
en devanae irangumae
என் தேவனே இரங்குமே இந்நாளில் என் ஜெபம் கேளுமே
கூப்பிடும் வேளையில் இரங்குவர் என் முக கண்ணீரை மாற்றுவிர் கலங்காதே என்று என்னையும் தேற்றி நீதியின் பாதையில் நடத்திடுவீர்
பாவியாம் என்னை அழைத்தவரே தாவியே உம் பாதம் சரணடைந்தேன் பகலிலும் இரவிலும் ஆலோசனை தந்து பாதுகாத்து என்னை தாங்கிடுமே
காலையும் மாலையும் ஜெபிக்கிறேன் நாளையும் வேளையும் நினைக்கிறேன் வேதனை உண்டாக்கும் வழிகளை அகற்றி நித்திய வழியிலே நடத்திடுமே
என்னையே பலியாக தந்தேன் ஐயா ஏழையாம் என்னையும் ஏற்றுக்கொள்ளும் நன்மைகளால் என்னை திருப்தியாக்கி காலா காலமாக நடத்திடுமே
அறிவிலே நான் சின்னபிள்ளை ஐயா ஆவியின் வரங்களை தாரும் ஐயா ஆதாரம் நீரன்றி யாரும் இல்லை அப்பாவை அழைக்கிறேன் வாரும் ஐயா
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal