என் ஆனந்த நல் தெய்வ
en aanandha nal theyva
என்ஆனந்த நல் தெய்வச் செய்தி கூறுவேன் மெய் ஆனந்தம் பொங்கி புகழ் பாடுவேன் என் உள்ளத்தில் இயேசுவந்த ஆனந்தம்-பேரானந்தம்
தீயவழியில் விரைந்தோடினேன் மாய உலகை நம்பி வாடினேன் தீய பாதையில் தேடிவந்தென்னை நல்ல இயேசு இரட்சித்தாரே ஆ-ஆ -ஆ ஆனந்தம் ஆனந்தம்
கர்த்தரின் அன்பை அறியாமலே எத்தன் போல் அலைந்தேன் இப்பாரிலே பித்தன் போலவே எத்தன் என்னிலே அன்புக்கூறி இரட்சித்தாரே ஆ-ஆ -ஆ ஆனந்தம் ஆனந்தம்
எத்தனையோ தெய்வத்தை நேசித்தேன் நித்தம் பூஜைபலிகள் ஆசித்தேன் கர்த்தர் இயேசு என் காரிருளிலே காட்சி அளித்திட்டாரே ஆ-ஆ ஆ ஆனந்தம் ஆனந்தம்
சேற்றிலிருந்து என்னை தூக்கினார் கன்மலையின் மேலே நிறுத்தினார் கர்த்தரை துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயில் கொடுத்தாரே ஆ-ஆ -ஆ ஆனந்தம் ஆனந்தம்
மாய சந்தோஷம் மாறிபோனது தூய சந்தோஷம் என்னில் பொங்குதே என்ன ஆனந்தம் என்ன பேரின்பம் இயேசு என்னில் வந்தாரே ஆ-ஆ -ஆ ஆனந்தம் ஆனந்தம்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal