ஏலேலமடி ஏலேல மடி
elelamadi elela madi
ஏலேலமடி ஏலேல மடி ஏலேலக் குயிலே-மயிலே பூலோகந்தனில் மேலோகந் தொழும் ஏலோகீம் பிறந்தார் சிறந்தார்-ஏலோகீம் பிறந்தார் - ஏலே
1.வெல்லை மலையினிலே ஒரு விடி வெள்ளியுதிக் குதையா-ஐயையா மேசையா வெள்ளியுதிக் குதையா யேசையா வெள்ளியுதிக் குதையா செல்லமலையெரு செல்லை மலையிலே சீவனுதிக் குதையா-ஐயையா செல்லையா சீவனுதிக் குதையா நல்லையா சீவனுதிக் குதையா - ஏலே
2. வானத்திலே யிருந்து இதோ வெகு மானம் வந்ததையா அதிசய ஞானம் வந்ததையா மெயச்சமா தானம் வந்ததையா நானக் குயிலாரே கலிலேய மேன்மைப் பயிலாரே விசித்திர நானத் தொயிலாரே கிறிஸ்தேசு நாதனை வாழ்த்துங்கடி. - ஏலே
3. ஆட்டை காணாமல் தேடித்தேடி அசந்து போனாரடி கோனாரும் இசைந்து போனாரடி ஓடி ஓடிப் பறந்து போனாரடி காட்டுக்குள் ளெங்கும் சுற்றித் திரிந்து கண்டு பிடித்தாரடி மகிழ்ந்து தொண்டு பிடித்தாரடி தோளிலே கொண்டு சுமந்தாரடி. -ஏலே
4. சீயோன் குமரியைக் காணாமல் ஐயர் சிந்தை மெலிந்தாரடி பொன்னையர் நிந்தை யடைந்தாரடி கண்ணையர் பந்த மிகுத்தாரடி ஞாயமுடன் வேதநாயகன் பாட்டுக்கு நன்மை தருவானடி நிசம் நிசம் உண்மை தருவானடி நடுவிட இன்னம் வருவானடி. - ஏலே
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal