ஏலேல கூட்டம் வாக்கிலல்லோக்
elela koottam vaakkilallok
ஏலேல கூட்டம் வாக்கிலல்லோக் காட்டும் நல்லார் சர்வத்திரள் யாவருங்கூட்டம் பொல்லார் அக்கினிக்கணையம்புகளை யோட்டும்.
1.பெத்தலேகஞ் சத்திரத்தில் மெத்த மாடடைகுடிலில் அர்த்த ஜாம ராத்திரியில் கர்த்தர் பிறந்தார் தரையில். - ஏலே
2. வானோர் கணங்கள் பாட வாத்தியங்கள் நீட கோனார் குதித்தாட கோவர்த்தனர் கூட. - ஏலே
3. காணிக்கைகள் நீட கன்னிமரியாள் பீட தோணக் கூடா நாட துரை பிறந்தார் தேட. - ஏலே
4. வாருங்கள் எல்லாரும் வகைவகையலங்காரம் சேருங்கள் விச்சித்திரம் சிறந்த பொற் பூஷணம். - ஏலே
5. தோரணங்கட்டுங்கள் துலங்கக்கொடி நாட்டுங்கள் வாரணம் பூட்டுங்கள் வட்ட மிட்டாடுங்கள். - ஏலே
6. பத்தியுடன் நில்லுங்கள் பராபரனைப் பணியுங்கள் பதக விக்யானங்கள் இதமுடன் கேளுங்கள். - ஏலே
7. வேத சாஸ்திர புராணங்கள் நாதகீர்த்தன ராகங்கள் ஆதிவார்த்தை ஆரம்பங்கள் ஓதும் வார்த்தை யனந்தங்கள். - ஏலே
8. கர்த்தரின் நாமம் கனத்த மகத்துவம் உத்தமத்தோர் அனைவோருமே வாரும் சித்தமகிழச் செபம் செய்யச்சேரும் அத்தனின் ஆசீர்வாதந் திரள்பாரும். - ஏலே
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal