ஏகனே ஏகாம்பரக்
eganae egaambarak
ஏகனே ஏகாம்பரக் காவலே காரும் ஆ! ஆ! ஆ! காவலே காலம் பெற காவலே காரும் காவலே இராவுந் திற காவலே காரும்
சுற்றி வா தேவா சுயம்பர ஜீவா துரிதம் வா தேவாதிர காவலே காரும்
1. பற்றி வா தேவாதிர காவலே காரும் பரிந்து வா யோவாதிர காவலே காரும் ஆ! ஆதேவ் ஒரே தேவ் தீட்சை மெய்க்குரு தேவ். - ஏகனே
2. ஆயிரந் தலைமுறைக் கடுக் கடுக்குக் காவலே ஆயிரமாயிரந்தரம் அஞ்சலஞ்சல் காவலே தாயரே மறந்தும் நீ தாரகமே காவலே தாசர் விசுவாசிகட்குச் சந்ததமுங் காவலே. - ஏகனே
3. நாளும் எந்நாளும் மனுவேலே நீ காவலே நாடி வணங்கு மணவாளன் நற் காவலே வேளையிதே மணவாளி பொற் காவலே வேதா தா ஆசியேசு நாதா நீ காவலே. - ஏகனே
4. கானாக் கலியாண தாராளா காவலே மேனாடு வானாடு சீராளா காவலே தானா தயாளா எம் வாழ்வே நீ காவலே சற்சி தானந்தா உன்னாளே மெய்க் காவலே - ஏக
5. நித்தம் நித்தம் அத்தனே சித்திதரங் காவலே கத்தவத்திலேறிய மகத்துவ நீ காவலே சுத்த பரிசுத்தவா சத்திர பதிக் காவலே உத்தம கிறிஸ்து பதம் பத்திரமே காவலே. - ஏக
6. சுவிசேட கவிராய கோத்திர மெய்க் காவலே சுப சோபனம் ஓங்க நேத்திரம் பார் காவலே சுவிசேட சபை வாழ்க காத்து வா காவலே துத்தியம் துத்தியம் நித்தியம் தோத்திரமே காவலே. - ஏக
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal