ஏ தன்னானே தன்னானன்னே
e thannaanae thannaananne
ஏ தன்னானே தன்னானன்னே தன்னானே தன தானன்னே தன்னான்னே தன்னானே - போடு நாட்டுப்புற பாட்டு ஒண்ணு பாட வந்தேன் உங்க நெஞ்சிக்குள்ள நல்ல சேதிய போட வந்தேன் அன்னமக்கா பொன்னமக்காவ தேடி வந்தேன் அந்த ஆண்டவர் இயேசுவின் அன்பத்தானே கூற வந்தேன் வானத்தையும் பூமியையும் வார்த்தையால படைச்சவரு வார்த்தையாய் இறங்கி வந்து உன்னை வாழவச்சவரு நல்லவரு கெட்டவரு யாவரோடும் உள்ளவரு அவர்தான் என்னையும் மீட்ட எம்பெருமான் இரட்சகரு ஏ . - தன்னானே
மாட்டு வண்டி கட்டிக்கிட்டு . . ஓ . . ஓ . . மாட்டு வண்டி கட்டிகிட்டு மாமியையும் கூட்டிக்கிட்டு சினிமாவுக்குப் போற மாமா சொல்லுறதை கொஞ்சம் கேளு சினிமாப்போல் உன் வாழ்க்கையும் நித்தமும் பொய்தான் மாமா சுத்தமாய் வாழ்ந்திட அழைக்கும் இயேசுவை நீயும் தள்ளிடலாமா பொல்லாத காலமிது பொய்யான வாழக்கையிது மெய்யாக வாழ்ந்திடவே இயேசு அன்பு அழைக்கிறது இன்னமும் தாமதம் நீ பண்ணாதே - மரித்து நரகத்தில் அங்கே இங்கே துள்ளாதே - 2 ஏ
வீடுவரை உறவு வரும் . . ஓ வீடுவரை உறவு வரும் , வீதிவரை மனைவி வரும் காடுவரை பிள்ளை வரும் , கடைசிவரை யார் வருவா ? பத்திலே பதபதப்பு , இருபதில் இருமாப்பு முப்பதில் உடல் முறுக்கு நாற்பதிலே தலை நரைப்பு ஐம்பதில் ஆட்டம் வரும் , அறுபதில் ஓட்டம் வரும் இத நீ புரிஞ்சுக்கிட்டா இயேசுவின் மேல் நாட்டம் வரும் இத தானே நீயும் கொஞ்சம் சிந்திக்கணும் - உனக்காய் ஜீவன் தந்த இயேசுவைத்தான் நம்பிடணும் - ஏ . .
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae