தேவா இயேசு தேவா
devaa yesu devaa
தேவா! இயேசு! தேவா - நானும் உன்னைத் தேடியே நித்தம் எந்தன் நெஞ்சில் பாடும் ராகம் கோடியே நீயே என் வாழ்வின் சொந்தம் நீ இன்றி வேறேது பந்தம் - தேவா! இயேசு! தேவா
தாயைப் போல் என்னைத் தேற்றினீரய்யா தந்தைபோல் சுமந்தீரய்யா ஒயாமல உறங்காமல் தூங்காமல் என்னை ஒவ்வொரு நாளும் காத்தீரய்யா நல்ல தெய்வமே நன்றி மறப்பேனா இல்லையென்றாலும் உன்னை வெறுப்பேனா - தேவா! இயேசு! தேவா
நீதிக்கு நீர் ஒரு சூரியன் தானோ நேசத்தில சந்திரனோ பாவிக்கு நீர் ஒரு இரட்சகன் தானோ பாசத்தில் நீர் ஒரு ஆகாயம் தானோ இதயராகமே உதயமானதே எனது நெஞ்சமே அபயமென்றதே - தேவா! இயேசு! தேவா
உலகத்தில் உள்ளவர் வெறுக்கட்டுமே உம்மைத்தான் நம்பிவந்தேன் காரணம் இல்லாமல் பகைக்கட்டும் என்னை கர்த்தருக்குள்ளே நான் மகிந்திடுவேன் எனது வாழ்விலே மகிழ்ச்சி வந்தது உனது அன்பிலே என் ஜீவன் வாழுது - தேவா! இயேசு! தேவா
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar