தேவா திருக்குமாரனுக்கு
devaa thirukkumaaranukku
தேவா திருக்குமாரனுக்குத் தோத்திர மோசனா செய தோத்திர மோசன்னா நித்திய தோத்திர மோசன்னா.
ஆவலதாயுலகோர் பவ மாறவனாதியு மனுவானார்.
1.ஆதி திரித்துவ ஜோ தியாண்ட பரனுட நீதி வேத மறை யுடனோதி மீளவு மானிட சாதி வானுல கேறி யெனூழியும் வாழ்க மகாதிருவுளமானார் தானவர் சூடிய ஜீவகிரீடமுமே முடியிடலானார் அற்புத வினோத னர்ச்சய பொற் பாதன் அருள் தேவப் பிரசாதனனைத் துயிர்க்கு நாதன் அன்பர்கள் சிந்தை மகிழ்ந்து வளம்பெற இன்ப மிகுந்துலகந்தனின் மேவிய.
2. ஆரண சத்திய மோங்க அக்கியான இருள்வாங்கத் தாரணியோர் பவம்நீங்க தற்பரனா ரடி தாங்க அந்தமிலாத பராபரனானவ ரன்புருவாய் வந்தார் சந்ததமுஞ்சபை யின்நடுவே குருமார்களையுந் தந்தார் சீருலகமெங்குந் தேவாலையங்கள் தேசுற விளங்கச் செயமங்களங்கள் சிந்துகளுங்கவி விந்தையுடன் சொலி மைந்தர் சிறந்து தொழும்படி நாடிய.
3. ஆவைமரி மனமகிழ ஆஞ்சுகள் மங்களம் புகழ் ஏவைசெய்த வினையகல இசறா வேலொடு சகல ராசர்களுங்குரு தேசிகருங்கவி நாவல ராவலரும் மாசறு பூசுரரீசுரரும் பலமாதவருந் தொழவே மாகபர மட்டும் வானதிசை யெட்டும் வாழ்வரசு கட்டு மானுவேலாளட்டும் வஞ்சகர் நெஞ்சகமஞ்சட்டும் செப விஞ்சையர் கொஞ்சியிறைஞ்சட்டும் திவிய.
4. ஆகம நீதிகள் முடிக்க அக்களித்தாஞ் சுகணடிக்க மாய்கைவலைப் பேய்துடிக்க மங்களம் வேதநாயகன் படிக்க தேகமிலாத பராபரனானவர் சிற்றுருவாய் நின்றார் மோகவிகார மூவாசைகள் யாவையு முற்றினுமே வென்றார் முற்பிதாக்கள் தேடும் மேசேசு கொண்டாடும் முத்தியர்கணாடும் மூவுலகும் பாடும் முன்னவனு ன்னத மன்னவனன்னையர் தன்னிடமுன்னிய பொன்னுலகதிசய.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal