தேவா பர கிறிஸ்து
devaa para kiristhu
தேவா பர கிறிஸ்து தேவா பர தேவா பர
1.சீவா தற்பர யோவா அற்புத சிந்தைப் பிரானேசா மூவாளொத்த சொரூபா பாவா காவா நசரேசா கிறிஸ்து - தேவா
2. நேசக் கிருபாலா யேசிசரேலா தாசர்க்கனு கூலா ஆசைக்கணாளா அன்பா தோழா நண்பா மணவாளா கிறிஸ்து - தேவா
3. வானத் திறைவன் மேன்மைப் பரமன் சேனைத் திரளோனே ஞானக் குரவன் நசரேத்தானே நம்முட பெருமானே கிறிஸ்து - தேவா
4. நித்தா ஞானப்பர்த்தா கர்த்தா நித்திய பரிசுத்தா அத்தா தேவதத்தா சீர்பா தத்தா கரிசித்தாள் கிறிஸ்து - தேவா
5. நித்திய சீவன்நீயே பாதையும் நீயே சத்தியமே பத்தனையுத்தம சித்த மிகுந்தே வைத்தாதரி நயமே கிறிஸ்து - தேவா
6. மட்டில்லா வானச் சேனைகளும் பூதலர் பாதலருஞ் சிட்டும் பாடுது திருநெல்லைப்பதி யானும் பாடுகிறான் கிறிஸ்து - தேவா
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal