தேவா தேவாதி தேவா
devaa devaadhi devaa
தேவா தேவாதி தேவா நின் பாதத்தைச் சேரத்தர மோவும் பர் தேவா
மூவா ளொன்றானயே யோவா நின் கிருபையை மூடனு ணர்வேனோ தேவா தேவா. - தேவா
1. அண்ட புவனங்க ளனந்த சராசரங்க ளெண்டிசையும் படைத்த தேவா தேவா கண்ட உருவங்களைத் தெண்டனிட்டே தொழுவோர் கடத் தேறக் கூடுமோ தேவா தேவா. - தேவா
2. பத்தியறி விலாத சத்துருப் பிசாசின் மக்கள் பரம பதம் சேர்வாரோ தேவா தேவா எத்தனை யானாலுஞ் சித்த மிரங்கி யெமை யிரட்சிக்க வந்த யேசு தேவா தேவா. - தேவா
3. ஆதியின் முன் பாவே வேதநாயகன் பாவே அன்பா நண்பா கண்பார் தேவா தேவா சாதியனைத் துங்கைவி டாது தற் காப்பாயே சத்திய கிறிஸ்துவே மெய் தேவா தேவா - தேவா
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal