தேவ மைந்தன் யோவான
deva maindhan yovaana
1.தேவ மைந்தன் யோவான ருகேகியே தீட்சை பெற்று யோர்தானதியைக் கடந் தாவலாயுப வாசிக்கச் சென்றனர் ஆரணி யத்திலே மகா கொடும் ஆரணியத்திலே.
2. சிங்கம் யாழி புல்வாய் பல்லுகங்களும் சிந்துரம் புண்டரீகம் செந்நாய்களும் சங்கமாய் தழங்கும் பழு வந்தனில் தந்தையா ரெழுந்தார் தவஞ் செய்யத் தந்தையா ரெழுந்தார்.
3. வானரங் கொஞ்சி மந்திமேல் சாயவும் மந்தி கெஞ்சி யருங் கொம்பில் பாயவும் கன கான மான்களும் மான் களு மேயவும் அகண்ட வனத் தெழுந்தார் கிறிஸ்து ஒரகண்டவனத் தெழுந்தார்.
4. வன்ன மாடப் புறாவின மேவிய மஞ்சையும் குயிலும் நின்று கூவிய அன்ன மாட வனக் கிளி பாடிய ஆரணியத் துற்றார் கிறிஸ்து ஓர் ஆரணியத்துற்றார்.
5. வண் டினங்களி சைந்து பண்ணீடிய வானம்பாடி நின்றானந்தம் பாடிய கண்ட துஷ்ட விலங்குகள் கூடிய கானகத் தெழுந்தார் தவஞ் செய்ய கானகத் தெழுந்தார்.
6. நாதனா ரிரவு பகல் நாற்பது நாளதாயுப வாசித் திருந்த பின் வாதையாய்ப் பசி தாப முண்டானதால் வாடியே யிருந்தார் வனத்திடை வாடியே யிருந்தார்.
7. அப்பொழுது பராபரன் மைந்தனீ யாகிலிக் கலை அப்ப மியற்றெனத் தப்பிதத் தலகை வந்து சாற்றவே தந்தையார் சொலு வார் மறு மொழி தந்தையார் சொல்லுவார்.
8. மாந்தன் அப்பத்தினாலல்ல வானவன் வார்த் தையா லும் பிழைப்பனென் றோதவே யேந்திரமான ஒருப் பரிகையின் மேல் ஏற்றிற் றண்ணலையே அலகை கொண் டேற்றிற் றண்ணலையே.
9. ஏற்றித் தேவ குமார னெனிற் குதி யிங்குன் காலிட றாப்படிக் காஞ்சுகள் ஆற்றித் தாங்கிக் கொண்டே கக்கற்பிப்பர் அனாதி யானென்றதே ஒன்றான அனாதியா னென்றதே.
10. என்று தீட்டினதா மெனப்பேய் சொல இயேசு உன் பரனாகிய கர்த்தனை சென்று சோதனை செய்யத் தகா தெனத் தீட்டி வைத்த தென்றார் திரும்பவும் தீட்டி வைத்த தென்றார்.
11. பின்னு முன்னத மாமலை ஒன்றிலே பேறு ளானைப் பிசாசு கொண் டேற்றியே இந்நிலத்தினில் ராட்சியம் வல்லமை யாவுங் காட்டினதே கணத்தினில் யாவுங் காட்டினதே
12. காட்டித் தாழ விழுந்தெனை யேத்தினால் காணும் யாவு முனக் களிப் பேனென மேட்டிமைக் குணமான பொல்லாதவே தாளங் கூறியதே துணிந்து வேதாளங் கூறியதே
13. அக்கணங் கிறிஸ் தத்துடனே போசாத் தானே யேக பரா பரனைப் பணிந்து ஒக்க அர்ச்சனை செய் யென்றியற்றின துண்மையா மென்றனர் வரைந்த தீ துண்மையா மென்றனர்.
14. என்ற அக்கணமே கணம் விட்டகன் றேகிற்றும் பர்கள் சேர்ந்து வந்தையனுக் கொன்றவே பய பக்தியினால் மிகுத் தூழியம் செய்தனர் கிறிஸ்துவுக் கூழியம் செய்தனர்.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal