அருள் பராபரனெனும்
arul paraabaranenum
அருள் பராபரனெனும் ஏசுநாதா சீயோன் ஐயை மகிழ்ந்து தினம் பணிபாதா.
தருமறை யுயர் சுவிசேட போதா நித்திய சயந்தறாஞ் சயம்புரை கயந்திடரே புரிந்து பயந்துடர் மானிடர்க்கு நயந்தரு மேசியாவே,
1. வேதத்தை முற்றும் நிறைவேற்றினையே நரர் வேடமதாக உரு மாற்றினையே நிதத்துபதே சங்கள் சாற்றினையே சொன்ன நெறியுடனொழு கியும் வெறி வினையகலிட மறியென விடர்படு திரிமுதலவனே - அருள்
2. மெய்யான தெய்வமுனை அடுத்தேனே லோக விக்கிரகமாயை யெல்லாம் தடுத்தேனே பொய்யான பேய்களைக் கைவிடுத்தேனே உயர் புத்தியின் கண் கொண்டுன் வேத சத்தியங் கண் டேனுனக்கு நித்திய சங்கீர்த்தனமும் துத்தியம் துத்திய முண்டு.
3. சூரியனை யணிந்தான் மணவாளா சுடர் தோன்றும் இருபுறங் கூருள வாளா வீரியச் சுரர் ஊதும் ஏழெக்காளா திகழ் விண்டில மாடிய அண்டர்கள் சேனைகள் தொண்டிடுமா பரமண்டல தேவா
4. நன்மை மிகுந் தேவாதி அருள்பாலா வேத நாயகன் தமிழினுக் கனுகூலா தொன்மை மெய்ச் சத்தியத்தினுயர் சீலா வெறி துக்கத்திடர் வினையொக்கக் கெடவருள் மிக்கப் பரன் வல பக்கத் தணுகிய - அருள்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal