அறியாத பாவி நானையா
ariyaadha paavi naanaiyaa
அறியாத பாவி நானையா யெனை யாளுமேசையா நன்றியறி நெறியான வேதமும் நிறைஞான போதமும்
1.கோபியாதேயும் என்னைச் சாபியாதேயும் தேவரீர் பட்ட பாட்டைப் பாரும் சிறியன் கேட்ட மன்றாட்டைத் தாரும்
2. கிருபையாயிரும் சுவாமி பொறுமையாயிரும் வறுமை வினையை நீக்கிப்போடும் வஞ்சகன் குற்றத்தை மறைத்துக் கூடும்
3. எந்த நாளுமே உவந்தென்னை யாளுமே விந்தைமலர் செம்பதத்தைக் காட்டும் மெத்தவும் சித்தம் வைத்தன்பு பாராட்டும்
4. திரும்பிப் பாருமேன் எனைவிரும்பிச் சேருமேன் இரும்பு மனக் கடினத்தைப் போக்கும் எந்தை பிதாவோடெனை யுறவாக்கும்
5. ஆற்றல் பெய்துமே மனத் தேற்றல் செய்துமே போற்றும் நீசனுக்கிரகஞ் சொரியும் புண்ணியனே யுனின் கிருபை புரியும்
6. தோஸ்திரமையா சங்கீர்த்தனமையா காத்தருளுமுன் சரணம் சரணம் கைவிடாதேயும் தருணம் தருணம்
7. ஆதிவஸ்துவே பரஞ் சோதிக் கிறிஸ்துவே வேதநாயகன் கற்றிப் படிக்கிறேன் மீட்பரே யுமைப் பற்றிப் பிடிக்கிறேன்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal