அல்லேலூயா வோசனா அல்லேலூயா
alleluya vosanaa alleluya
அல்லேலூயா வோசனா அல்லேலூயா அல்லேலூயா ஓசனா அல்லேலூயா அல்லா ஓசனா, அல்லா ஓசனா, அல்லா ஓசனா. - அல்
1.சொல்லுரையின் படியே பெத்லெ மெனும் வெல்லைமலை யடியே பரி சுத்தமாய் வளர் வஸ்துவாமொரு கத்தனான கிறிஸ்துவும் வந்தார். - அல்
2. ஆதியுமந்த மிலான் அனாதிதந் தாதையர் தந்தை சொலான் பவ மாற வல்லிருண் மாற அன்பர்கள் தேறவுங் கரையேறவும் வந்தார். - அல்
3. அந்தரத்தா லுலகை மயக்கிய தந்திரப்பேயலகை தலை அற்கவானவர் சொற்கவாசல் திறக்க மக்கள் சிறக்க உதித்தார். - அல்
4. மைந்தரனுகூலன் மகத்துவ விந்தை மனுவேலன் திரு மாலன் மெய்கிரு பாலன் முக்கிய நூலன் நற்குண சீலனும் வந்தார். - அல்
5. வானத் திருந்தருளாய் மகத்துவ ஞானம்பரம் பொருளாய் திவிய வஸ்துவான கிறிஸ்துமேவிய சித்திரமான நட்சத்திரங் கண்டோம். - அல்
6. தேவர்கள் அட்சய னைத்தியங்கிய பாவிகள் இரட்சகனை விச் சேத்திரமாய்ப்பத தோத்திரமேசெய நேத்திர மானமுச் சாத்திரர் வந்தார். - அல்
7. தூதர்கள் நேசனையே தவீதெனும் யூதர்கள் இராஜனையே கன சூசனைக் கிருபாசனைச் சரு வேசனைப் பத பூசனை செய்வோம். - அல்
8. வெல்லைப்பதிப் பெருமான் நவ எரு செல்லைக் கதித் திருமான்கவி வேதநாயகன் ஓது தாயகன் பாதகாத்திரம் எப்போதுமே தோத்திரம். - அல்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal