அல்லாவொரு நபியாங்கு
allaavoru nabiyaangu
அல்லாவொரு நபியாங்கு மோதுங் கேடது போடுங்கோ நம் அல்லா.
சல்லாப நூலே நல்லாவியாலே தருமனு வேலாவே. - அல்லா
1. எல்லாரும் வாரும் பொல்லாத பேரும் இல்லாத பேருந்தானே கல்லாதோராரும் நில்லாமற் சேரும் நல்லாயனம்முட கோனே. - அல்லா
2. அந்தர வானுஞ் சுந்தரவுலகுந் தந்த வொரு வன்றானே வந்தானே நந்தாதா அவன் சொந்தம குணன்றானே. - அல்லா
3. ஈசாவலா மகராசா தயாபர வேசாறலே தினமே மாசாலமே விய பூசாரி மார்கள் பிசாசான பேர்சனமே. - அல்லா
4. பித்தர்கள் சிலைகள் முற்றிலும் வீணே பேதமையது காணே கற்றது மிலையோ வானவர் கோனோ கல்லதிலிருப் பானோ. - அல்லா
5. செம்பதுஞ் சிலையும் நம் பரனாமோ தேறின ஞானிக ளே கும்பியில் விழுவீர் வம்பு செய்யாதீர் குணப்படு மிது நாளே. - அல்லா
6. ஆதாரமே தவர் பாதார விந்தமே அருயாருட சொந்தமே தீதான பாதகர் பாதாள வீடது சேர்வார் கணிற் பந்தமே. - அல்லா
7. நெல்வேலி வேதநாயகன் பாட்டை நெடுகிலும் பாராட்டே பல்லூழி காலம் வாழ் மோட்ச வீட்டைப் பதிய மனத்தை நாட்டே. - அல்லா
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal