ஐயா எது வேணும்
aiyaa edhu venum
ஐயா எது வேணும் அருள்பதியே லட்சம் அனந்த வந்தனம் துதியே.
1.மெய்யா யெனைப் புரக்க வையத்துதித்த பரா வேண்டும் விண்ணப்பம் வேணுமா வேணுமா வேணுமா வானோர் துய்யோனுனைப் புகழும் பொய்யாசுகிர்த செல்வ சொந்தர சொல் அப்பம் வேணுமா. ஐயா
2. கேராபீன் சேராபீன் கின்னரர் கெம்புரர் கீர்த்திக்கும் புகழ் வேணுமா வேணுமா வேணுமா இந்தப் பாரோர் மனந்திரும்பி யாராதனை விளம்பிப் பணியும் மகிழ்வும் வேணுமா. ஐயா
3. சேட்டனேரோதே ராசன் கோட்டையரண்மனையின் சிறப்பு மகிமை வேணுமா வேணுமா வேணுமா வெல்லை மேட்டின்மேற் காட்டிடை மாட்டுக்கொட்டிலுற்ற மிருதுபுல்சுகம் வேணுமா. ஐயா
4. பச்சை வயிரம் ரத்தின மிச்சமதென சித்திரம் பகல் வாடும் பூ வேணுமா வேணுமா வேணுமா செயா அச்சயா முச்சகா தட்சகா ரட்சியென் றறையுமா அன்பு வேணுமா. ஐயா
5. நேசயேசு ராச மேசியா நிசமே நிறையு மிதையம் வேணுமா வேணுமா வேணுமா கெட்ட பாசமுவாசையில் மோசமாயு ழன்றோரின் பவமுஞ் சிதைய வேணுமா. ஐயா
6. அதிபதி யிது ததி நிதநித மருள்கதி அபையஞ் சமையம் வேணுமா வேணுமா வேணுமா நல்ல புதிய உச்சித பத கவி ஞனெலியா வுனைப் போற்றுஞ் சுமையும் வேணுமா.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal