ஆயத்தமாவோமே அன்பால்
aayathamaavomae anbaal
ஆயத்தமாவோமே அன்பால் - நாம் ஆண்டவரின் சேவை செய்ய காயத்தையும் இந்த லோகத்தையும் நாம் மாயை என்று வெறுத்து
மாயையாம் லோகத்தைக் கவர்ந்து அந்தோ மாளுதே மா ஜனம் உவந்து ஏராளமாய் விரிவான பாதையில் போகிறார் நரகத்திற்கு - மாளவே போகிறார் ஹநரகத்திற்கு
உண்மையுள்ளவரே அழைத்தார் - நாம் ஊழியம் செய்ய பெலன் அளித்தார். உத்தம பிரதிஷ்டை பாதையில் சென்று உன்னதர் சித்தம் செய்வோம் - மண்ணில் ஊழியம் நித்தம் செய்வோம்
நிருபங்களாயிருப்போமே - மங்கா எரிபந்தமாய் எரிவோமே இருளின் மக்கள் மா வெளிச்சத்தைக் காண எரிந்து பிரகாசிப்போமே மண்ணில் எரிந்து பிரகாசிப்போமே
கொஞ்ச காலம் என்றறிந்தான் - சாத்தான் கோபத்தால் சீறி இறங்கினான் ஆபத்து என்று அறை கூவி சாற்றி ஆத்துமாதாயம் செய்வோம் - நின்று சாத்தானை ஜெயித்திடுவோம்
ஆத்துமாதாயம் செய்யாமல் - அவர் முன் நிற்க முடியாதன்னாளில் தன்னை வெறுத்து சிலுவை சுமந்து அன்னவர் சீஷராவோம் - வாரும் சொன்னவரை சந்திப்போம்
மங்கா சுவிசேஷம் சுமந்து - அந்தோ மண்ணிலெங்கும் சுற்றி திரிந்த - பாதம் மலையின்மேல் வைத்து அழகு பார்க்கிறார் என்ன இதாச்சரியம் ஆஹா என்ன இதாச்சரியம்
ஊழியம் செய்வோரின் பாக்கியம் - பிதா கனம் பண்ணுவதென்ன சிலாக்கியம் ஊழியம் செய்வோர்க்கும் செய்யாதோர்க்கும் உள்ள வேற்றுமை அந்நாளிலே குமாரராய் சம்பத்தை சேர்த்திடுவார்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal