ஆத்துமாவே உன்னரசன் துயரடைந்த
aathumaavae unnarasan thuyaradaindha
ஆத்துமாவே உன்னரசன் துயரடைந்த கனபாடே தேற்ற மாகவே சொல்லாய் இது சீயோன் மகளோடே
தோற்றமாய்க் கொடும் யூதர் பகை தொடுத்தே உயிர் முடித்தார்-என்
1.பூங்காவினில் விழுந்தோர் பவம் பொறுக்க வனத் தெழுந்தார் தீங்காற் செபம் புரிந்தார் திருச் செங்குருதிகள் சொரிந்தார் பரன் தாங்காத் துயர் பூண்டார் இத்தயவா யுனை மீண்டார்-என்.
2. யூதாசு வந்தடுத்தான் முத்தி உகந்தே ஒப்புக் கொடுத்தான் தீ தாய் பரர் வளைந்தார் கொடும் தீமையாவையும் விளைந்தார் மிக்கக் கோதாய்க் கரங் கட்டினார் தலைக் குருவின் வீடதிற் கிட்டினார்-இதோ.
3. அன்னாவுமே பொரிந்தான் காய் பாவு மிக வெரிந்தான் பின்னோர் களும் ஏசினார் பெரும் பெயர் தூஷணம் பேசினார் மிகை சொன்னார் படு சூட்சிகள் அவ சுத்தமான பொய்ச் சாட்சிகள்-இதோ.
4. துட்டனோ பகை நிறைந்தான் பரஞ் சோதியின் முகத் தறைந்தான் கெட்டியாய்க் கண்ணைக் கட்டினார் பல கெட்ட பாவிகள் குட்டினார்-அர்ச் சிட்ட னோர் தனும் மறுத்தான் எசு தேவ சேயனும் பொறுத் தான் - பார்.
5. கொந்தளித் ததி காலமே யூதர் கும் பெலாங்கன ஓலமாய்ப் பொந்தியுப் பிலாத் திடத்தே மனம் பொங்கியே ஒப்புக் கொடுத்தார் ஒரு விந்தையாய் நடுக் கேட்டான் மிக வேதனை செய்து போட்டான் - பார்.
6. கற்றூ ணோடு சேர்த்தான் வார்க் கசை யாலடித் தார்த்தான் வெற்றி யாமென எண்ணினான் குருதி வெள்ள மோடிடப் பண்ணினான் பார் பற்றி முண்முடி சூட்டினார் பரிகாச வேந் தென நாட்டினார்-ஒகோ.
7. மூங்கிற் கோல் கையிற் கொடுத்தார் கொடும் மூர்க்க மாயறை விடுத்தார் சாங்கமாய்ப் புகழ் வாழ்த்தினார் சகலாத்துச் சட்டையைப் போர்த்தினார் கிறிஸ்தோங்கலின் முகந்துப்பினார் ஒரு காலை தூஷணஞ் செப்பினார்-ஓகோ.
8. ஏரோதும் பரிகாசித்தான் பித்தன் எனவே சொல்லி ஏசித்தான் விருது வெண்ணுடை யிட்டான் கும்பில் மீளவும் வர விட்டான்-துரை பரபாவையே விடுத்தான் கொல்லப் பாத்திபன் றனைக் கொடுத்தான்.
9. குருசை புயத் தெடுத்தார் கொலைக் கொல்கொதா மலைக் கடுத்தார் எருசலை நகர் கடந்தார் நெடும் தெரு வீதியைத் தொடர்ந்தார்-அங்கே உருகி அழப் பெண்கள் கண்ணீ ரோடினதிருக் கண்கள்-ஐயோ.
10. வலிதாயுடை களைந்தார் சேவகர் தான் சுற்றி வளைந்தார் சிலுவைதனில் ஏற்றினார்-கொடும் தேவதூஷணஞ் சாற்றினார் மூவுலகாவையும் ஆண்டான் அங்கு பெலியாகியே மாண்டான் - பார்.
11. சோதியுமுயிர் கொடுத்தான் பெருஞ் சூரியன் ஒளி விடுத்தான் நீதியாவையுங் கண்டான் இரு நீதராலடக் குண்டான் நெல்லை வேத நாயக னாடி னான் இது சேதியாவையும் பாடினான் - பார்.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal