ஆசீர்வாதமே கிருபையுண்டான
aaseervaadhamae kirubaiyundaana
ஆசீர்வாதமே கிருபையுண்டான காலமே அல்லேலூயா
மேசியாவினால் விசு வாசநேசர்மேல் அல்லேலூயா - ஆசீர்
1.தந்தை திருப்பாலன் அதிவிந்தை மனுவேலன் சாதியாருட தீதுமாறிட மாது மாமரியாளிடம் வந்த ஆ. அல்லே
2. காட்டொலிவத் தருநாமே கோட்டான் குஞ்சுகளாமே (ஏசா. 43:20) மீட்டுக்கொண்ட தேவாட்டுக் குட்டியின் பாட்டுக்கும் பட்டபாட்டுக்குந் துதி ஆ. அல்லே
3. உத்தம போதகமார் ஒரு மித்துவந் தோதியநேர் சுத்த சுவிசேட ஞானவாக்கியம் எத்தனை யெத்தனை யானபாக்கியம் ஆ. அல்லே
4. சத்திய ராஜாங்கம் தழைத் தெத்திசையு மோங்க சித்தமான திருவுளச் செயல் அத்தியந்த வானந்த சந்தோஷம் ஆ. அல்லே
5. அட்சயமாக மிசியோன் தட்சகர் வாழ தெட்சணாயண முத்தராயணம் எச்சபைகளும் பெருகப் பெருக ஆ. அல்லே
6. சித்திரகூடம் போலே திரத்திடும் அஸ்தி வாரத்தாலே தேசமெங்கணும் வேதம் விளங்கவும் தேவாலயங்கள் பிரசங்க முழங்கவும் ஆ. அல்லே
7. அருமையாளரே கிறிஸ்துவுக் குரிமையாளரே திருநெல்லை வேதநாயகன் பாட்டுத் தேவகுமாரனுக்கான கொண்டாட்டு ஆ. அல்லே
தேவாரம் திருநெல்லை யாதியாய்த் தென் கடல் வடகடல் மட்டாகப் பெருகிய சபையின் தேவஸ் தலங்களும் பெருக்கமாகி அரியசற் குருமாரோங்க ஆகஸ்றேபிளையர் வாழ்கக் கிருபைசெய் தருளுமையா கிறிஸ்துவே யேசுநாதா
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal