ஆசீர்வாதம் தந்தனு
aaseervaadham thandhanu
ஆசீர்வாதம் தந்தனுக் கிரகம் செய் ஐயா ஏசுநாயகா ஆண்டவா உனின் கிருபை கூர் மேசையா
தேசுலாவிய நேச மெய் மறைத் திருச்சபை யினம் பெருக்க மாகியே மாசதான தீவினையுறாமலே மாயோக மதாய் மேன்மைகளே நீடிமெய்யாய் வாழ்கவே - ஆசீர்
1. விற்பன உபதேசிமாருக்கும் வாத்திமாருக்கும் மெய்ச்சபை பணிவிடை உத்தியோகர்க்கும் சற் குருக்கள் மெஞ்ஞானி மாருக்கும் தலைமை யோருக்கும் புலமை யோருக்கும் பற்பல தருமத் துரை மாருக்கும் பக்கிஷத் துனின் முக்கிய நற்கருணைக் கனம் பெற மிக்க மிக்கவே. - ஆசீர்
2. சத்துருக்கள் தீ வினையடாமலே பசாசுலகுடல் சதிகளே செய்யும் பகையடாமலே நித்தம் நோய் பிணி சேர்ந்திடாமலே நெடுந்து யர்களும் நேர்ந்திடாமலே சித்தமாக என்னாளும் காத்துமே சிந்தைக் குண மிகுந்தற் புத விந்தைப்படி இந்தச் செணம். - ஆசீர்
3. மைந்தர் மாதர்கள் மகிழ்ந்து கூடவே சந்ததிகள் நீடவே மட்டில்லா களிப்பாய் கொண்டாடவே விந்தை யான சோபனங்கள் சூடவே வேதநாயகன் பதங்கள் பாடவே சிந்தையாக வந்தெந்த நாளிலும் திடத்தி வருவினை கடத்தியருள் பரன் இடத்தில் நிலை பெற நடத்தி யனுதினம். - ஆசீர்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal