ஆசை கிறிஸ்தரச னிவர்தானோ
aasai kiristharasa nivardhaano
ஆசை கிறிஸ்தரச னிவர்தானோ வென்றன் அருமை ரட்சக ரென்பதிவர் தானோ
1. மாசில்லாத சித்திர பானு போலுதிக்கிறார் மகிமைத் தமது திருவசனத்தை விதிக்கிறார் வந்தெனை முகம் பராரா மனத்துயரத்தைத் தீராரா மாட்டாரா கைவிட்டுப் போட்டாரா மாட்டுக் கொட்டிற்குளிவர் வந்த தென்னமோ. - ஆசை
2. அழகினில் ராசகுமாரனைப் போலே யிருக்கிறார் அன்பான பார்வை யாலென்ன கத்தையுமுருக்கிறார் ஆற்றுமத்தகை மீறுதே யாசை விண்ணுலு மேறுதே அற்புதமோ தெய்வ வுற்பனமோ ஆச்சரிய மாயெனை மீண்டாண்ட தெய்வமோ. - ஆசை
3. அத்தன் றிருச் செயலைப் புத்தி யெப்படி கொள்ளும் ஆண்டவன் கிருபைக் கென்னக மக்களித்துத் துள்ளு ஆராய் வில்லாத வாழமே அளவிலடங்காத நீளமே யவர் அன்பது மின்பமதும் ஆச் சரியமாய் பிரமிப் பாக்கி வைக்குதே. - ஆசை
4. கர்த்தன் றிருவுடலிற் காயமைந்திருக்குது கங்குல் பகலு மாயென் கருத்தினை யுருக்குது காணாத வாட்டை நோக்காரா கண்டு பிடித்தாற் றூக்காரா அவர் கற்பனையும் விற்பனமுங் காட்சியாகத் தோன்றி யென் கண்ணுக்குள் நிற்குதே - ஆசை
5. வேத நாயகன் சொன்ன பாட்டைக் குலாவுகிறார் மிக்க சபையினடுவே வந்துலாவுகிறார் மேனியெல்லாம் பசும் பொன்னா மெய்யாக வானத்தின் மன்னா இவர் விண்ணோர்க்கு மண்ணோர்க்கு மேவி நடுவாக வந்த மேசையாவோ - ஆசை
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal