ஆசாரி யருமைக் கிறிஸ்துவே
aasaari yarumaik kiristhuvae
ஆசாரி யருமைக் கிறிஸ்துவே நசராபதி யென் மேலனுக்கிரகஞ் செய்தாதரி மாசாரித்திரா பரமேசுரா வான தந்திரி திரித்துவா சரீரி.
1.சீலா திவ்விய தேவ குணாலா செகம்பர விலாசா விணோர் பரவு காலா கருணை மனு வேலா விசித்திர விசரேலா சத்திய வேத நூலா வனாதி திருப்பாலா வெனைப் படைத்த.
2. சீரா தரும மிகுதாரா பொனி நசரை யூரா தவிது வங்கிஷ வேரா திருமறையி னேரா வதிக பல வீரா சருவ சங் காரா பரம குமாரா வெனைச் சிஷ்டித்த.
3. வேதா மெஞ்ஞான மருள் போதா அனந்தவுக்கிர நீதா திருவரப் பிரசாதா பராபரனின் றூதா கதியருளும் பாதா அனைவருக்குந் தாதா வேசுக்கிறிஸ்து நாதா வெனை ரட்சித்த.
4. கானா வரசு புரி கோனா கடாட்ச வபி மானா வேதாகம நிதானா அளவில்லாத ஞானா பரப் பிரம தியானா திமிங்கலத்தின் யோனா மெய்த் தேவ வனுபானா வெனைப் புரந்த.
5. பொய்யா மறையருளும் மெய்யா பவவினைகள் செய்யாது தவு திருக்கையா புனித மிகுந் துய்யா நரக மதினையா தருள் செய்யென தையா கிறிஸ் தெனுமே சையா உனக்குப் புண்ணியம்.
6. தேவா திரிதத்துவ மூவா உயிர்த்தெழுந்த ஜீவா எவ்வுலகுக்குங் கோவா சலப் பிரளைய நோவா வேதநாயகன் பாவா வோரே யொருயே யோவா வெனை ரட்சித்துக் காவா வுனைக்கும் பிட்டேன்.
7. சேட்டா பரிசுத்தவர்ச் சீட்டா சீயோன் குமாரி தேட்டா தபோதனர்கள் கூட்டா பரமண்டல நாட்டா திருச்சபை மன்றாட்டா வேத நாயகன் பாட்டா பாவிகளின் கொண்டாட்டா வுனக்கபையம்.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal