ஆனந்தமே பரமானந்தமே
aanandhamae paramaanandhamae
ஆனந்தமே பரமானந்தமே - எந்தன் ஆத்தும நேசரின் மெய் அன்பினால் அவரன்பின் பாதத்தை அனுதினமும் தேடி கிருபையின் பாதத்தில் பரிவுடன் கூடி ஆவியினால் நிறைந்தே கவி பாடி அவருக்கே செலுத்துவோம் துதிகோடி
கிறிஸ்துவின் அன்பை அறியாமலே - நான் கிறிஸ்துவின் நடத்துதல் தெரியாமலே வானவர் வாக்குகள் அறிந்திடாமல் - நான் வழிவிலகி தூர போயிருந்தேன் - என்னை கிருபையின் கரத்தினால் திருப்பினாரே - அவர் கருணையின் கரங்களில் அணைத்தனரே
எண்ணில்லா மீறுதல் என்னிடமிருக்க மன்னித்தாரே என்னை மாதயவாய் அன்னையை போலெனக்கன்பளித்தாரே - நான் என்னத்தை கொடுப்பேன் இயேசுவுக்காய் - மெய் நன்றியினால் உள்ளம் மகிழ்ந்திடுதே - நான் என்றுமே அவருக்காய் பிழைத்திடவே
உலகம் மாமிசம் ஒன்று கூடி எந்தன் உவகையை மாற்றும் வேளையிலே கலக்கத்தினால் நான் கண்ணீர் விடும் வேளை கலங்காதே திகையாதே மகளே (மகனே) என்று - தன் ஆணிக்கடாவின கரங்களினால் - என் கண்ணீரை துடைத்தாரே அன்புகொண்டு
உன்னை நான் அறிவேன் என் மகளே (மகனே) உன் பெலவீனத்தை நான் அறிந்திடுவேன் கள்ளனைஅறிந்த கர்த்தனேசு நான் தள்ளவே மாட்டேன் சோர்ந்திடாதே - நீ உள்ளளவும் அல்லேலூயா பாடி மகிழ்வாய் மகனே (மகளே) எனத் தேற்றினாரே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal