ஆலேலூயா ஆலேலூயா ஆலேலூயா பரர்க்
aalelooyaa aalelooyaa aalelooyaa parark
ஆலேலூயா ஆலேலூயா ஆலேலூயா பரர்க் கனந்தனந்த சங்கீர்த்தன மாலேலூயா.
சாலோக பதங்களுக்கு மேல தானோ ரிந்தத் தாரணிமீது மகாதயவாய் நரர் சாயலின் வடிவானார்.
1.திருவிரக்கமுற்ற கிறிஸ்தேசு நாதர் நரர் சீலமதாயுருவான தினாலவையே தினமே புகழ்வோம் அருள் மிகுத்த வானவரும் பாடக் கேட்கி றோமீதா ராயவொணாத மகா கிருபா நதியாழவ கோசரமே.
2. தன்னிகரில்லாத வொன்றாந் தேவபுத்திரன் எங்கள் சாயல தாயுரு வாயவ தாரம தாகிய சாதுரியன் முன்னணையிலே யிதோ படுத்திருக்கிறார் இது மூதறி வோருளம் யாவதுமே பிரமை மூடியமா தயவே.
3. அளவில்லாத வல்லவனெல்லார்க்கு மேலா னோனுல கானதும் வானதும் வானதின் மேவிய யாவையுமே தருவோன் வளமுடன் சிறு குழந்தையாக வன்னையார் கனி மாமரியாள் மடியானதிலே கிடையானதெம் மாறுதலே.
4. அதிசய மிகு மனாதிஜோதி பூமிக்குத்திக ழாரண தீத நனீத வினோத மெய் நூதன வொளிவிடுது துதிமிக இதோகொடு மிராவிருளிலும் அதி தூயபிரகாசமதா யொளிவீசுது சோதியின் மாதயவே.
5. இன்னீசருக்குன்னதமா மோட்ச வாழ்வு கிடைத் தேதமிலாமலெந் நாளும் விணூடொழிலாகவும் வாழ்கவுமே பொன்னுலகதி பதியாந் தேவபுத்திரனிந்தப் பூதலமீதினில் மாபரதேசி போலாகினர் பூரணமே.
6. அன்புடனமக் கிரங்கி நம்மை மோட்சத்தில் மா ளாத மெய்வாழ் வதினால் மிகசூரியராய் வளமேறவுமே இன்பமிகும் இரட்சகர் மகத்துவமெலாந் துறந் தீனம தாயெளியோனென நீடினரீது மகா தயவே.
7. மட்டற்ற தமதன்பின் கருத்தைக் காண்பிக்க வந்த மானுவேலாதி பராபரனேய குமாரனையே பணிவோம் இஷ்டமுடன் துதிசொல்லும் வேதநாயகன் தமி ழேறவுமேசு வென்னேசர்குழா மகிழாகவும் வாழ்கவுமே.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal