ஆதியடி முடி நடு
aadhiyadi mudi nadu
ஆதியடி முடி நடு வானபரன் வெல்லையடி வாரமனுக் கோலவடி வந்தயேசு சீர்கொளடி வந்தித்தால் நாம் வந்தித்தால் வளமிகுமே நலமிகுமே.
1.இஸ்திரி வித்தரியபரி சுத்த சுத்த மகத்துவசரி பத்தி லட்சணச் சிகரி பரமகுரு பதம் பணி தரி பாசத்தால் முழு விசுவாசத்தால் பாக்கியமே சலாக்கியமே.
2. நீத மிகுமாதி சத்தி நித்திய நீள் வேத சித்தி நிச்சய மெஞ்ஞான முத்தி நீங்கா மனு வேலைப்பற்றி நேசித்தால் நாம் நேசித்தால் நிலை மகிழ்வே நித மகிழ்வே.
3. இயேசு மகராச நிதி எங்களுயிர் சீவ பதி என்று முள திவிய கதி ஏகதுரை மகிழ் சனதி இன்பத்தால் மா இன்பத்தால் இசை நிறைவே நிச அறிவே.
4. தேவ திரியேக வஸ்து செப்பவரி தான முத்து தேவசிகாமணி சம்பத்து திரித்துவத் தொன்றாங் கிறிஸ்து சேவித்தால் நிதஞ் சேவித்தால் ஜெயம் வருமே திட மிகுமே.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal