ஆதியான் நரனான நிலைமையே
aadhiyaan naranaana nilaimaiyae
1.ஆதியான் நரனான நிலைமையே யொருவராலும் அளவிட அரிதான வலமையே தூதர்சேனை சோபனங்கள் கூறினார் மந்தையாயருந் துணிந்து வந்தடி பணிந்து தேறினார் மூதறி வான முச்சாஸ்திரிமார் வந்தார் கிழக்கிலிருந்து முடுகி நின்று முக்காணிக்கைகள் தந்தார் நூதனமான வோர் உடுவைக் காட்டினார் உலகத்துக்கெல்லாம் நோன்மையாய் ஞான பிரவை மூட்டினான்.
2. தாரகை சாஸ்திரிமாரைக் கூட்டிற்று குழந்தை இருந்த தல மட்டும் வழிநடத்திக் காட்டிற்று நேருடனெருசலேமின் முன் சென்றார் குழந்தையைக் கொல்ல நினைத்த வஞ்சகன் மனத்தையும் வென்றார் சீருடன் பொன்னையும் தூபத்தையும் உய்த்தார் வெள்ளைப் போளத்தை சிறப்பதாய் முனம் நிரப்பியே வைத்தார் ஆரியன் அடியை பணிந்து தாங்கினார் கண்ட சொற்பனம் தடுத்து மற்றொரு தடத்தினீங்கினார்.
3. திட்டத்துலகின் பவங்கள் ஏகவே யுருக்கமாய் வந்த திருக்குமாரர்க்கு பெருக்கமாகவே எட்டுதினத்திற் சுன்னத்தாசரித்தார் கிறிஸ்திரட்சகர் ஏசுவென்ற பிதானமே தரித்தார் தொட்டு சிமியோன் கரத்திலேந்தினான் அன்னாளுடனே துதித்து தன் மனக்கவலை நீந்தினான் சட்டத்துட னாலயத்தை நண்ணினா-னீராறு வயதிற் சாஸ்திரிகளோடே தர்க்கம் பண்ணினான்.
4. கன்னிமாமரி யன்னை நீடினார் சூசையப்பரும் கனிந்தலைந் தெருசலையிற் றேடினார் மன்ன வன்றனை மூன்றாந் தினந்தனிலே சாஸ்திரிகளை வழுத்தக் கண்டனர் ஆலயத்தினிலே யென்ன செய்தை என் மகனே நீ என்றார் பிதாவுக்கடுத்த தியற்ற வேண்டுமன்றோவென்றே நவின்றார் உன்னதனெழுந்தவரை பின் தொடர்ந்தான் தந்தை தாயருக் குடைந்தையாகக் கீழ்ப்படிந்துதான் நடந்தான்.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal