ஆதிமெய்தேவனே உன் அன்பிற்கோர்
aadhimeydhevanae un anbirkor
ஆதிமெய்தேவனே உன் அன்பிற்கோர் நீதியாம் ஜோதி அனாதிதேவனே - உன் நீதிக்கோர் எல்லையுண்டோ எல்லையுண்டோ
எத்தனையோ பாவங்கள் அத்தனே அகற்றினீர் பத்திலோர் பங்கு போதாதெனறெண்ணி - நான் தத்தம் செய்தேன் உமக்கே
எத்தன் எனக்காக - இன்னுயிர் கொடுத்தீரே இயேசுவின் அன்பிற்கு எதை செலுத்துவேன் இதயம் ஈடாகுமோ
ஆழ்ந்த கடலிலே அமிழ்ந்து போன என்னை தூக்கி எடுத்த உம் அன்பை நினைக்க - என் துதிகள் தான் போதுமோ
பாவத்தில் மாண்ட என்னை - கோபத்தால் அழிக்காமல் இரட்சித்த உந்தன் அன்பை நினைத்து - நான் பட்சமாய் போற்றிடுவேன்
கெத்செமனே பூங்காவில் - பட்சமாய் வேண்டி நிற்கும் இரத்த வெள்ளத்தில் கத்தி கதறும் மெய் சத்தம் தொனித்திடுதே
அலையும் புயலுமாய் அமிழ்த்தி வீழ்த்துகையில் நான்தான் பயப்படாதிருங்கள் என்ற - உம் அன்பின் தொனி கேட்குதே
எண்ணும் நன்மை எதுவும் என்னிலே இல்லை ஐயா பின்னே ஏன் என்னை நேசித்தீரோ என்னில் கொண்ட உம் அன்புதானோ
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal