ஆதி திரித்துவமே யெனை
aadhi thirithuvamae yenai
ஆதி திரித்துவமே யெனை யாள் மகத்துவமே
சோதி யொருத்துவப் பிதாச் சுதனுமாவியு மாகத் தோன்றும் நித்தியத்தின் மூன்று பொருளொன்றான - ஆதி
1.சத்தியப் பரமதேவா அளவில்லாத சகல நன்மைச் சொரூபா முத்தி தருமொரே யோவா முடிவிலாத மோட்சராச்சியப் பிரதாபா பத்தர் பணியும் பரிசுத்த ஞானப்பர்த்தாவே பக்கிஷமே நிறைந்த முக்கியகிருபைக்கத்தாவே - ஆதி
2. திஷ்டிதிதி சங்காரா உலக ரட்சை செய்தருளுஞ் சிங்காரா இஷ்ட மிகுமுதாரா வானதிகாரா ஏழையடியர்க் காதாரா மட்டில்லா துயர்ந்த மகிமைத்திருக் குமாரா மாசதற்ற பரிசுத்த நரவதாரா - ஆதி
3. பாவிக்கிரங்குந் தஞ்சமே பரதபிக்கப் படவைக்குது பிரவஞ்சமே சாவிற்கொடிய வஞ்சமே பிசாசு செய்யும் தந்திரத்தாலென் னெஞ்சமே மாவிதனபடாமற் காருமொஇரட்சகா மனதுகந் தருட்கண் பாரும் சர்வ தட்சகா - ஆதி
4. வல்லமைக் கிருபாசனா துயரடைந்த மைந்தர் பவ விமோசனா துல்லிப ஞானப்போசனா நித்தியகாலந் தோத்திரந் தோத்திர மோசனா வெல்லைப்பதியில் வந்த மேசியாமனாவே வேதநாயகன் தன் பாட்டைச் சொலுமெனாவே - ஆதி
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal