ஆதி பிதாவின் சுதன்
aadhi pidhaavin sudhan
ஆதி பிதாவின் சுதன் பிறந்தார் கன்னியாஸ்திரியிடமே சுதன் பிறந்தார் தேவரூப சொரூபானந்த சோதி.
1.சாதிகள் செய்த கொடும் பாதகமே தொலைக்கத் தற்பரானந்த குருநீதன் (சுயதற்பரா) உயர் முப்பொருளொன்றாஞ் சத்திய வேத னெங்கள் சாமி யேசு நாதன்.
2. வானம் புவியுந்தந்த ஞானந்தயை நிறைந்த வல்லமைச் சுயாதிபத்தியராயன் (சருவ வல்) ஏழை மனுடர்க்கதி பிரிய நேயன் தயை வைத்த சகாயன்.
3. ஏதன் சிங்காரக் காவிலா தன் துரோகத்தாலே எல்லாத்தையும் படைத்தவஸ்து (ஒகோ) மகா ஏழை நராட்களினந் திஸ்து நமதிறைவனேசுக் கிறிஸ்து.
4. தன்னிகரில்லாத வோருன்னதமான தேவன் மன்னன் றவீது வங்கிஷ நேசன் (யூதர் மன்னன்) திரு வசனப் பிரதாப சத்திய வாசனிம்மானுவேல் ராசன்.
5. மந்தையாயர்கள் கூட சந்தித்தரசர் தேட அந்தரத்திற் சுரர் நின்றாடப் (பணிந்தந்தா) சதா னந்தனந்த சோபனம் பாட பரமானந்தம் நீட.
6. நெல்லை வேதநாயகன் சொல்லுங் கிருபைத் தாயகன் வல்லப ஞான மணவாளன் (சருவவல்) எங்கும் பல்லுயிர் பணியுந்துணைத் தாளன்நித்திய பரமகுணாளன்.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal