இயேசுவே வானத்தை விட்டிங்கே
yesuvae vaanathai vittingae
1. இயேசுவே, வானத்தை விட்டிங்கே வருகிறீரோ, விண்ணுடன் மண்ணை நீர் ஒப்புரவாக்கத் தாழ்ந்தீரோ, ஆண்டவரே- என்னை நீர் மீட்பதற்கே மனிதப் பிறப்பானீரோ.
2. ஆதித் தகப்பனால் போனதனைத்தையும் நீரே உமது மீட்பினால் எனக்குத் தேடிவைப்பீரே. எனக்குண்டாம்- நோவும் இக்கட்டுமெல்லாம் தீர, நீர் உற்பவித்தீரே.
3. என்னைப் பிசாசு பிடித்துக் கெடுக்க விரும்பும் மரணம், நரகம் என்னை விழுங்க எழும்பும். மீட்பரே, நீர்- வந்த்தால் எனது சீர் பாக்கியமாகத் திரும்பும்.
4. இயேசுவே, எனக்குள் நல்லகுணத்தை உண்டாக்கும்; ஆவியை, தேகத்தை உம்து ரூபுக்கொப்பாக்கும். உம்மை மகா- பக்தியாய்ப் போற்றிவர என்னை எச்சரிக்கை செய்யும்.
5. என்னையும் நீர் விசுவாசிகளுக்குக் கொடுக்கும் நித்திய ஜீவனின் வாழ்வுக்கும் ஆனந்தத்துக்கும் கொண்டு போமேன்- என்று மன்றாடுகின்றேன். அங்கே என் மனமிருக்கும்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal